இனி தற்காப்பு இல்லை அதிரடித் தாக்குதல் தான்! இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் ஒரு மிகப்பெரிய "தாக்குதல் பிரச்சாரத்தை" (Offensive Campaign) தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி இயல் ஜமீர் (Eyal Zamir) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுவரை தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், இனி ஆக்கிரமிப்புத் தாக்குதல்களை நடத்தும் எனத் தளபதி ஜமீர் தெரிவித்துள்ளார்.
எதிராகத் தாக்குதல் நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டோம் இனி நாங்கள் தற்காப்பு நிலையில் மட்டும் இருக்கப்போவதில்லை, இப்போது தாக்குதலுக்குச் செல்கிறோம்," என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் நடவடிக்கை சில நாட்கள் அல்ல, பல நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதற்காக ராணுவம் நீண்ட காலப் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், அலை அலையாகத் தாக்குதல்களைத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் அச்சம்
எங்களுக்கு வலுவான தற்காப்புத் தயார்நிலையும், அதே சமயம் இடைவிடாதத் தாக்குதல் தயார்நிலையும் தேவை, என்று கூறியுள்ள தளபதி, எல்லையில் ராணுவக் குவிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
லெபனான் எல்லையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இஸ்ரேலின் இந்த அதிரடி அறிவிப்பு, மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போருக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வரும் என்பது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam