எதிர்கட்சிக்கு இனி எதிர்காலத்தில் அரசியலில் இடமில்லை - ரொசான் எம்.பி பகிரங்கம்
இலங்கையில் அரசியலில் எதிர்கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை எதுவும் செய்ய முடியாத நிலையில் தடுமாறுகின்றனர். இதனால் தான் நாடாளுமன்றத்திலும் வருகை தந்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து வேறு விதமாக செயற்படுகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்காக எதுவும் செய்யவில்லை
மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை தேடி தீர்ப்பதற்காக நாடாளுமன்றம் செல்கின்றோம்.

இது தான் எங்கள் அரசியல். ஆனால் எதிர்கட்சியினர் மக்களுக்காக எதுவும் செய்யவுமில்லை. கடந்த காலத்திலும் இது தான் நடந்தது. தற்போது மக்களுக்கு புரியும் எமது அரசாங்கத்தை பற்றி எனவும் தெரிவித்துள்ளார்.