நாட்டில் டொலர் இல்லையென்கின்றனர் ஆனாலும் ஆட்சியாளர்களிடம் உள்ளது - சஜித் பிரேமதாச
நாட்டில் டொலர் இல்லையென்கின்றனர். ஆனாலும் நிறையவே டொலர் உள்ளது. அது ஆட்சியாளர்களின் பைக்கற்றுக்களில் உள்ளது. எங்களது ஆட்சி மலரும் பட்சத்தில் அவர்களின் பைக்கற்றுக்களில் உள்ள டொலரை வெளியே கொண்டு வருவோம். என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு இந்தக் குடும்ப அரசே முழுப் பொறுப்பு. இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்படுவது கண்டிப்பாக மேற்கொள்ளப்படும். அத்தகைய திருடர்களுக்குத் தண்டனை வழங்குவது துல்லியமாக நிறைவேற்றப்படும்.
நாட்டை கட்டியாள வேண்டிய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமானதொரு ஆட்சியை புரிந்து வருகின்றனர். இந்த நாட்டிலே ஆட்சியாளர்களால் நடைபெறும் களவு, பொய், வஞ்சகம், சூறையாடல், போன்ற தாக்கம் காரணமாக நாடு அதளபாதாளத்தை நோக்கி செல்கின்றது.
எங்கு சென்றாலும் எரிவாயுவிற்கு வரிசை, பெற்றோல் டீசலுக்கு வரிசை, பிள்ளைகளுக்கான மாவிற்கு வரிசை, விவசாயிகள் பசளைக்கு வரிசை, சீனிக்கு பருப்புக்கு வரிசை அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சிதைவடைந்துள்ளது.
இந்த அரசாங்கத்தின் மிகவும் கீழ்த்தரமான அரசியல் காரணமாகவே இந்த நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாது செய்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ளனர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்
நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை மூலம் அரசையும் ஜனாதிபதியையும் தோற்கடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்தோடு மாத்திரம் நின்று விடாமல் இருபதாம் திருத்தம் மாற்றப்பட்டு, பத்தொன்பதாவது திருத்தத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.” என தெரிவித்துள்ளார்.





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
