7,500 ஆக உயர்த்தப்பட்ட எரிவாயு விலை! கோப் குழுவில் அம்பலப்படுத்தப்பட்ட பாரிய ஊழல்
இலங்கையில் பொருளாதார சரிவு என்ற சாக்குப்போக்கின் கீழ், வெளிப்படுத்தப்படாத நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் எரிசக்தி நெருக்கடி - மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை என்பன வேண்டுமென்றே உறுவாக்கப்பட்ட ஒன்று என பொது நிறுவனங்கள் குழு (COPE) குற்றம் சாட்டியுள்ளது.
எரிவாயு விலை ரூ. 1,500 இலிருந்து ரூ. 7,500 ஆக உயர்ந்தமையானது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் கடந்த கால எரிசக்தி நெருக்கடி அதாவது மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் குறிக்கப்பட்டது என போலியான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
COPE அமர்வு
இந்த வாரம் 24.09.2025 அன்று நடைபெற்ற COPE அமர்வின் போது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குழுவின் தலைவர் நிஷாந்த சமரவேரா, இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சகை(CEB) மற்றும் இலங்கை டிரான்ஸ்ஃபார்மர்ஸ் லிமிடெட் (LTL) உட்பட அதன் துணை நிறுவனங்கள் மீது அமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.
சில அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக சமரவேரா இதன்போது குற்றம் சுமத்தியிருந்தார்.
இதில் ரூ. 5,943,680 தவறாகக் கையாளப்பட்டதாக பாரிய குற்றச்சாட்டொன்றையும் முன்வைத்துள்ளார்.
சாதாரன இழப்பு அல்ல
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், "இது ஒரு சாதாரன இழப்பு அல்ல. நிறுவனத்திற்குள் இருக்க வேண்டிய நிதி தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டமையை வெளிப்படுத்துகிறது," என்று அவர் கூறியுள்ளார்.
மின்சாரக் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டதை அவர் மேலும் விமர்சித்துள்ளார். பாடசாலை தேர்வுகள் போன்ற முக்கியமான காலங்களில் 18.5 மணி நேரம் வரை மின்வெட்டு விதிக்கப்பட்டது.
ஆனால் கட்டண உயர்வுகள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட உடனேயே நீக்கப்பட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"இது விலை உயர்வை நியாயப்படுத்த ஒரு திட்டமிட்ட நடவடிக்கை" என்று அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எரிவாயு பற்றாக்குறை நாட்டில் செயற்கையாக உறுவாக்கப்பட்டது என சுட்டிக்காட்டி தமகு கருத்துக்களை விளப்பா்ாடுத்தியிருந்தார்.
மேலும், எரிவாயு விலை ரூ. 1,500 இலிருந்து ரூ. 7,500 ஆக உயர்ந்து, நுகர்வோர் நடத்தையை கையாளவும் விலை உயர்வுகளை நியாயப்படுத்தவும் இந்த நெருக்கடி பயன்படுத்தப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
