இலங்கையில் கோவிட் நான்காம் அலை ஆபத்து தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் கோவிட் நான்காம் அலை ஆபத்து கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையையே இலங்கை இன்னமும் எதிர்நோக்கி வருவதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துடுவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள சந்திப்பில் இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
சில நாடுகள் நான்காம் அலை பற்றி பேசி வருவதாகவும் இலங்கை இன்னமும் மூன்றாம் அலையிலேயே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட் நான்காம் அலை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவ கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் பத்மா குணரட்ன இது குறித்து நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
