சீன அரிசியில் அரசியலைவிட ஆபத்துகள் அதிகம் : ஐங்கரநேசன் எச்சரிக்கை

Sri Lanka China Northern Province of Sri Lanka
By Kajinthan Aug 12, 2024 12:15 PM GMT
Report

சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கிவருகின்ற அரிசி குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திட்ட மனோ தரப்பு

சஜித் பிரேமதாசவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைசாத்திட்ட மனோ தரப்பு

பொருளாதாரச் சரிவு

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது.

இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர்-அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியைக் கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது.

சீன அரிசியில் அரசியலைவிட ஆபத்துகள் அதிகம் : ஐங்கரநேசன் எச்சரிக்கை | There Are Many Hidden Dangers In Chinese

அண்மையிற்கூட வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடை அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந் நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது.

உலகில் அதிகளவில் அரிசியை உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிக அளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனாவே முதலிடத்தில் உள்ளது.

ஆனால், அண்மைக்காலத்து ஆய்வுகளின் முடிவுகள் சீனாவின் அரிசியில் சூழல்மாசு காரணமாகக் கட்மியம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலதிக வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகலாம்

மேலதிக வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகலாம்

தரப் பரிசோதனை

கட்மியம் (kaṭmiyam) உடலுக்கு அத்தியாவசியம் இல்லாத ஆபத்தான ஒரு பார உலோகம். உணவின் மூலம் உடலில் நுழைந்து நீண்டகாலம் தேங்கியிருக்கக்கூடிய இக்கட்மியம் சிறுநீரகங்களை செயலிழக்க வைப்பதோடு மார்பு, நுரையீரல், சதையம், சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தரப் பரிசோதனை செய்யப்படாத அரிசியை நுகர்வது குறித்துப் பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

சீன அரிசியில் அரசியலைவிட ஆபத்துகள் அதிகம் : ஐங்கரநேசன் எச்சரிக்கை | There Are Many Hidden Dangers In Chinese

இலங்கை 2023ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் தன்நிறைவைக் கொண்டிருந்தது. கடந்த பெரும் போகத்தில் மழைவெள்ளம் சில பிரதேசங்களில் நெற் செய்கையைப் பாதித்திருந்தாலும் இந்த ஆண்டினது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படவில்லை.

சீனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருப்பின் தனது சந்தேகத்திற்கு இடமான அரிசியை இலங்கையில் விநியோகிப்பதை நிறுத்தி இலங்கையிலேயே அதனைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதே சாலச்சிறந்தது.

சீன அரிசியில் அரசியலைவிட ஆபத்துகள் அதிகம் : ஐங்கரநேசன் எச்சரிக்கை | There Are Many Hidden Dangers In Chinese

இந்நடைமுறை சரியான சந்தை வாய்ப்புகளின்றித் தவிக்கும் எமது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதோடு ஆபத்தான பாரஉலோகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் செய்யும்.

சோற்று அரசியல் சேற்றுக்குள் சிக்கி மென்மேலும் எமது மக்களின் வாழ்வு சீரழியாமல் இருக்க உரிய தரப்புகள் இது குறித்து உடனடியாக ஆவனசெய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

you may like this


திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி விவகாரம்: ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

திருக்கோணேஸ்வரர் ஆலய தாலி விவகாரம்: ஆளுனர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகியமை தொடர்பில் வெளியான காரணம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US