மேலதிக வேட்பாளர் ஒருவருக்கு 200 மில்லியன் ரூபா செலவாகலாம்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதிகரிக்கும் ஒரு வேட்பாளருக்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபா செலவாகும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான செலவு
வேட்பாளர்கள் அதிகரித்தால், மேலதிக நிதி செலவாகலாம் என்றும், எனினும் இம்முறை தேர்தலுக்கான செலவு 9.7 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தினால் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதால் அது போதுமானதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் செயலலகத்தின் 700 உத்தியோகத்தர்களுடன் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இம்முறை 2,25,000 அரசாங்க உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸாரை மாத்திரம் ஈடுபடுத்தவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அந்த வகையில் 54,000 பொலிசாரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இராணுவத்தின் ஒத்துழைப்பு தேவைப்பட்டால் பொலிஸ் மா அதிபர், அதற்கான தீர்மானத்தை மேற்கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan