ராஜபக்சர்களுக்கு சிங்களவர்களின் செய்தி! புறக்கணிப்பை ஏற்ற தேரர் (Video)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருந்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கலந்துக் கொள்ளும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கொழும்பு பல்கலைகழகத்தின் முகாமைத்துவம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஏற்கனவே அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அபயராம விகாரையின் விகாதாதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார்.
முருந்தெட்டுவே ஆனந்த தேரர் கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டமைக்கு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தினரும், மாணவர் சங்கங்களும், விரிவுரையாளர்களும் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது எமது உண்மையின் அலசல் விசேட தொகுப்பு,
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri