வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் (Photos)

Sri Lanka Police Jaffna Crime
By Theepan Jul 22, 2023 06:36 AM GMT
Report

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வலி. வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 33 வருடங்களுக்கு மேலாக உள்ள பிரதேசங்களில் சில பகுதிகளை இராணுவத்தினர் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் நோக்குடன், அந்த காணிகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதி மற்றும் தெல்லிப்பழை - தென்மயிலை பகுதி ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். அவ்வாறு இராணுவத்தினர் வெளியேறி உள்ள போதிலும் அவை உயர் பாதுகாப்பு வலயமாகவே தற்போதும் உள்ளது.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் (Photos) | Thefts High Security Zone In Jaffna

வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் 

குறித்த பகுதிகளை மாவட்ட செயலரிடம் உத்தியோகபூர்வமாக தாம் கையளித்த பின்னரே காணி உரிமையாளர் காணிக்குள் பிரவேசிக்க முடியும் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அதனால் , காணி உரிமையாளர்கள் உயர்பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிக்கு வெளியே நின்றே விடுவிக்கப்படவுள்ள காணிகளை பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தமது காணிக்குள் வெளியாட்கள் சிலர் நடமாடுவது தொடர்பில் அறிந்து காணிக்கு சென்ற போது, உயர் பாதுகாப்பு வலய வேலிக்கு உள்ளே வாகனங்களுடன் நடமாடும் திருடர்கள் காணிக்குள் திருட்டுக்களில் ஈடுபடுவதனை அவதானித்துள்ளனர்.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் (Photos) | Thefts High Security Zone In Jaffna

அது தொடர்பில் , கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோருக்கு அறிவித்த போது , குறித்த பகுதிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதி , அப்பகுதிகளை இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னரே தாம் அப்பகுதிக்குள் செல்ல முடியும். அது வரையில் அவை உயர் பாதுகாப்பு வலயமே என தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிட தாம் அஞ்சுவதாகவும் , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் வாகனங்களுடன் சென்று பொருட்களை களவாடுகிறார்கள் என்றால் , நிச்சயம் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும்.

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள் (Photos) | Thefts High Security Zone In Jaffna

அது தொடர்பில் இராணுவத்தினரிடம் முறையிட சென்றால் தமக்கு ஆபத்து ஏற்படலாம் என காணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.

தமது கண் முன்னே தமது காணிக்குள் இருந்து பொருட்களை களவாடி செல்பவர்களை, எதுவும் செய்ய முடியாது இயலாமையுடன் பார்த்துக்கொண்டு, தமது காணி விடுவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US