யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு அமெரிக்கன் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீட்டில் 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வீட்டிலுள்ளவர்கள் நேற்றையதினம் (14) உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்று பின்னேரம் வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியில் இருந்த நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
11 பவுண் தாலிக்கொடி, 1 1/2 பவுண் சங்கிலி என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri