எரிபொருள் வரிசையில் அதிகரிக்கும் வாகன உதிரிபாகங்களின் திருட்டு( Photos)
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகம் திருடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று(29) இடம்பெற்றுள்ளது.
வாகன உதிரிபாகம் திருட்டு
எரிபொருள் நிலையத்திற்கு அருகில், இரவு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்த முன்பகுதி பாகமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
களவாடப்பட்ட ஜப்பான் 200 ரக மோட்டார் சைக்கிளின் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
வரிசைகளில் இரவு வேளைகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களின் பக்க கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் பெரும் எண்ணிக்கையிலான தொலைபேசிகளை திருடிய மூவர் கைது (Photo) |