ரஷ்ய சுற்றுலா பயணியின் 600 டொலர் திருட்டு - பொலிஸார் எச்சரிக்கை
ஹிக்கடுவை வெவல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணின் அறைப் பெட்டகத்திலிருந்து 600 டொலர் பணத்தை நபர் ஒருவர் திருடியுள்ளார்.
இந்த ஹோட்டலில் தங்கியிருந்த பெண் எல்ல பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று இரவு திரும்பி வந்த போது பணம் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
ரஷ்ய பெண் இது தொடர்பில் ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
முகாமையாளர் ஹிக்கடுவ பொலிஸாருக்கு அறிவித்ததுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுற்றுலா துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்படப்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
