யாழில் இரு இடங்களில் நகைகள் திருட்டு: பொலிஸார் விசாரணை
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி - குலனை பிரதேசத்தில் பெண்ணொருவரின் 5 பவுண் சங்கிலி வீதியில் வைத்து அறுக்கப்பட்டுள்ளது.
சித்தங்கேணி வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து குலனையூரை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணின் 5 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் சித்தங்கேணியில் உள்ள உறவினரின் வீட்டு அந்தியேட்டி கிரியைகளில்
கலந்துகொள்வதற்காக பேருந்தில் சென்று, பேருந்துதில் இருந்து இறங்கி கிளை
வீதியூடாக சென்றுள்ளார்.
இதன்போது அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த அந்த பெண்ணை கீழே தள்ளி விழுத்திவிட்டு சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
வீட்டை உடைத்து திருட்டு
அத்துடன் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த 7 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் பதிவாகியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆவார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்ற வேளை இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டினை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.