கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! வீடொன்றுக்குள் பெருந்தொகை நகைகள் கொள்ளை
கொழும்பில் வீடொன்றில் பெருந்தொகை தங்க நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கம், பணம் கொள்ளை
குறித்த வீட்டில் கட்டட வேலையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினாலேயே திட்டமிட்ட வகையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தை சாதமாக பயன்படுத்திக் கொண்டு, வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் 30 பவுண் தங்கம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
திருட்டுச் சம்பவங்கள்
கொள்ளையிட்ட கும்பல் தலைமறைவாகி உள்ள நிலையில், தெஹிவளை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் மிகவும் கவனமாக செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியாகும் விஜயின் இறுதி தீர்மானத்திற்காக காத்திருக்கும் தமிழகம்! வரலாற்று திருப்பத்தில் தமிழ்நாட்டு அரசியல்களம்