கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அதிரடியாக சீனாவுக்கு நாடுகடத்தப்பட்ட 37 வெளிநாட்டினர்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஒரே இரவில் விஜயின் இல்லத்திற்கு விரைந்த முதலமைச்சருக்கான Convoy வாகனங்கள்! தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்
11 சீனப் பாதுகாப்பு அதிகாரிகள்
இந்நிலையில், கைது செய்யப்பட்டு தற்போது நாடு கடத்தப்பட்டுள்ள சீன நாட்டினரில் 6 பெண்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதற்காக 11 சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
மேலும், இந்தக் குழுவினர் நேற்று (04) இரவு 10.50 மணிக்கு, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU-714 பயணிகள் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குன்மிங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.