ஒரே இரவில் விஜயின் இல்லத்திற்கு விரைந்த முதலமைச்சருக்கான Convoy வாகனங்கள்! தமிழகத்தில் எதிர்பாராத திருப்பம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில், வழக்கமாக ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கப்படும் உயர்மட்டப் பாதுகாப்பு மற்றும் கான்வாய் (Convoy) வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
பிரசாரக் களத்தில் சாதாரண ஒரு தலைவராக வலம் வந்த விஜய், இன்று உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக மக்கள் மாத்திரமல்லாது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளன.
முதலமைச்சர் அந்தஸ்திலான பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் ஜாமர் (Jammer) கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தைச் சென்றடைந்துள்ளன.
பாதுகாப்பில் அதிரடி மாற்றம்..
அதேநேரம், தமிழக பொலிஸின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விஜயுடன் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் முடிவுகள் அல்லது அரசியல் நகர்வுகளின் அதிரடி திருப்பமாக, வெறும் 24 மணி நேரத்திற்குள் விஜயின் பாதுகாப்பு மற்றும் புரோட்டோகால் (Protocol) முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
"நேற்று வரை ஒரு வேட்பாளர், இன்று மாநிலத்தின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தலைவர்" என சமூக வலைதளங்களில் இந்த காணொளிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
"இதுதான் அரசியல் - ஒரே நாளில் வாழ்க்கை முறை அப்படியே மாறிவிடும்" என அவரது தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
சென்னை வீதிகளில் இந்த வாகன அணிவகுப்பு செல்லும் காட்சிகள், தமிழக அதிகார மையத்தின் திசை மாறிவிட்டதை மௌனமாகப் பறைசாற்றுகின்றன. தமிழக அரசியலில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்புடன் வெற்றிச்சான்றிதழ் பெற புறப்பட்ட விஜய் - வெற்றிபெற்ற தவெக வேட்பாளர்களுக்கும் அழைப்பு