மகிந்த ராஜபக்சவை எதிர்த்ததால் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்! கைதான 9 பேரில் தமிழர்களும்
இலங்கை ஊடகத்துறையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குறித்த விடயத்தில், நீதியை நிலைநாட்டுவதற்கான புதிய கட்டத்தை நீதித்துறை எட்டியுள்ளது.
இந்த வழக்கினை விசாரிப்பதற்காக நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) ஒன்று நிறுவப்பட்டது.
அதற்கமைய, அனைவரும் எதிர்பார்த்திருந்த அந்த வழக்கு விசாரணைகள், குறித்த மேல் நீதிமன்ற குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில், வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி பல பகுதிகளில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவருக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வந்தவரே ஊடகவியலாளர் மற்றும் அரசியல் கேலிச்சித்திரக் கலைஞரான பிரகீத் எக்னெலிகொட.
இவர் தொடர்பான வழக்கு விசாரணைகளில் வெளியாகியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,