ஆலய திருவிழாக்களில் தங்க ஆபரணங்கள் திருட்டு: பெண்கள் உட்பட 9 பேர் கைது
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியால் தேவாலயம் உட்பட இரு வெவ்வேறு இடங்களில் தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3¼ பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட ட குற்றச்சாட்டிலே நேற்றையதினம் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலய திருவிழாவில் பங்குகொள்ள வந்த பெண் ஒருவரிடமிருந்து சந்தேகத்திற்கிடமான பெண்கள் தங்க ஆபரணத்தை அறுத்து செல்ல முற்றபட்டபோது அங்கிருந்த மக்கள் குறித்த குழுவினரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
உறவினர்களின் செயல்
இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு வத்தளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஒருவர் உட்பட , 27, 33 வயதுடையவர்கள் எனவும் மூன்று பேரும் உறவினர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
