அமெரிக்காவிற்கு எதிராக ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் வெனிசுவேலா குற்றச்சாட்டு
அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் வெனிசுவேலா குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
அமெரிக்கா சட்டவிரோதமான ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அது சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறிய செயல் எனவும் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையின் வெனிசுவேலா பிரதிநிதி சாமுவேல் மொன்காடா (Samuel Moncada) இந்த கடுமையான குற்றம்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதியை
வெனிசுவேலா மீது குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸும் “கடத்தப்பட்டதாகவும்” மொன்காடா தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் எந்தவித சட்டப்பூர்வ அடிப்படையும் இன்றி மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அமெரிக்காவின் செயற்பாடு ஐக்கிய நாடுகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலவந்தப் பயன்பாட்டுக்கான தடை, நாடுகளின் சமத்துவ இறையாண்மை ஆகிய அடிப்படை கொள்கைகளை நேரடியாக மீறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதியை கைது செய்வது அல்லது கைப்பற்றுவது, சர்வதேச சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளில் ஒன்றான பதவியில் உள்ள தலைவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உரிமையை மீறுவதாக மொன்காடா வலியுறுத்தினார்.
இந்த பாதுகாப்பு உரிமை ஒரு நபருக்கான தனிப்பட்ட சலுகை அல்ல; அது ஒரு நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் நிறுவன அடிப்படை என அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள், நாட்டின் அளவு அல்லது வல்லமை எதுவாக இருந்தாலும், அனைத்து நாடுகளுக்கும் ஆபத்தான முன்னுதாரணமாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு நாட்டின் நிலப்பரப்பில் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்துவதும், அங்கு உண்மையான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதும், அது அதிகாரப்பூர்வ இணைப்பு அல்லது நிரந்தர படை இருப்பு இல்லாவிட்டாலும் கூட,தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாகவே கருதப்பட வேண்டும் என மொன்காடா தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டம் அனைவருக்கும் சமமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 15 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan