இயல்பு நிலைக்கு திரும்பும் வெனிசுவேலா தலைநகர் காரகாஸ்
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றங்கள் தணிந்து, தலைநகர் காரகாஸ் இன்று முதல் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடைகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் வழமை போல் இயங்கி வரும் நிலையில், நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாரிய பொலிஸ் நடமாட்டம் காணப்படவில்லை.
நியூயோர்க் நீதிமன்றத்தில் முன்னிலை
இதற்கிடையில், துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக நாடாளுமன்றத்தில் விசேட அமர்வு நடைபெறவுள்ளதால் அதனைச் சூழவுள்ள வீதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

அதேவேளை, கைதான மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நியூயோர்க் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 16 மணி நேரம் முன்
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri