களமிறங்கும் மகிந்தவின் இளைய புதல்வர்? விரிவடையும் ராஜபக்சக்களின் அரசியல் நகர்வு - செய்திகளின் தொகுப்பு
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின்(Mahinda Rajapaksa )இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச(Rohitha Rajapaksa) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித்த ராஜபக்ச வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டே ரோஹித்த ராஜபக்ச சில சந்தர்ப்பங்களில் குருணாகல் மாவட்ட நடவடிக்கைகளில் தலையீடுகளைச் செய்து வருவதாகவும் அண்மையில் குருணாகல் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், ஒரு வைத்தியசாலையின் குறைபாடுகளைக் கேட்டறிந்து அவற்றை நிர்வத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri