பிரித்தானியாவில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் - அதிகரிக்கும் இராஜதந்திர அழுத்தங்கள்
தியாக தீபம் திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தலையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் வலியுறுத்தி பிரித்தானியாவில் மூன்று இடங்களில் அடையாள உண்ணாவிரதமும், நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
குறித்த நிகழ்வுகள் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புலம்பெயர்ந்தவர்களின் கோரிக்கை
பிரித்தானியாவின் லிவர்பூல், கார்டிஃப், சவுத்பால் ஆகிய இடங்களில் உணர்வு ஏழுச்சியுடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை மற்றும் இனவழிப்புக்கு எதிரான பரிகார நீதி மற்றும் திலீபனின் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வுகளினால் இரராஜதந்திர ரீதியாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுப்பதாகவும் புலம்பெயர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

