பிரான்ஸில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இலங்கையரின் மோசமான செயல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரான்ஸில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Honoré-de-Balzac பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் ஆடு ஒன்றை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக குறித்த இலங்கையருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் செப்டெம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2018ஆம் ஆண்டு முதல் ஒநோறே து பள்ஸாக் பகுதியில் உள்ள பூங்காவில் ஆடுகள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரோ ஒருவர் நுழைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நபரால் ஆடுகளுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடுகள் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளமையினால் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி 53 வயதுடைய இலங்கையை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். மிருகங்களுக்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் கைது செய்த போது தனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை என இலங்கையர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய டிசம்பர் மாதம் 23ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய அவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாழ்நாள் முழுவதும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அத்துடன் குறித்த ஆடுகளின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவருக்கு 400 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பூங்காவிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு 1,050 யூரோவும், கால்நடை மருத்துவ செலவுகளுக்கு 287 யூரோவுக்கு, ஏனைய சேதத்திற்கு 1,000 யூரோவும் அபராதமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
