வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்:பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊர் மக்கள் கோரிக்கை(Photos)
வவுனியா மாமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளிக்குளம் - சிதம்பரம் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காட்டு யானைகள் அட்டகாசம்
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்கு நுழையும் காட்டு யானைகள் கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமங்களுக்குள் உட்புகுந்து தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரகாலமாக என்றுமில்லாத வகையில் தனியன் காட்டுயானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.
மேலும் இவ்வாறு இரவு நேரத்தில் திடீரென கிராமத்திற்குள் நுழைகின்ற காட்டு யானைகளினால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அத்துடன் ஊருக்குள் யானை நுழைந்ததை அறிந்து கொண்ட மக்கள் விழிப்படைந்ததுடன் அதனை விரட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
சமீப காலமாக காட்டு யானைகள் கள்ளிக்குளம் - சிதம்பரம் கிராமங்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதினால் இரவு வேளையில் மக்கள் நித்திரையின்றி விழித்திருக்கின்றனர்.
இதனால் பல்வேறு உடல் உள உபாதைகளுக்குள்ளாகியும் வருகின்றனர்.
எனவே காட்டு யானைகளை விரட்டுவதற்க்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
