அமெரிக்கா இலங்கை அரசியல்வாதிகளிற்கு உதவக் கூடாது! - கொழும்பில் போராட்டம் (Photo)
அமெரிக்கா இலங்கை அரசியல்வாதிகளிற்கு உதவிசெய்யக்கூடாது எனகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி வீதியிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு எதிராக புலம்பெயர்ந்த அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடாது எனவும், நாட்டில் உள்ள அவர்களின் சொத்துக்களை அம்பலப்படுத்துமாறும் கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக பெரும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.







