முடங்கும் அபாயத்திலிருந்து தப்பியது அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு, நிதியில்லாமல் நேற்றையதினம் (01.10.2023) முடங்கும் அபாயத்திலிருந்த நிலையில், கடைசி நேரத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்ததால், அந்த அபாயத்திலிருந்து தப்பியிருக்கிறது.
அமெரிக்காவில் அரசுப் பணிகளுக்கான செலவினங்கள், ஊழியர்களுக்கான ஊதியங்கள் உள்ளிட்டவற்றிக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலும் அவசியம்.
இரு அவைகளின் ஒப்புதல் பெற்ற மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டதும், அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை! நீதிபதி சரவணராஜா வெளியேறியதில் நடந்தது என்ன..(Video)
அதன்படி, கடைசி நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் ஒதுக்கப்பட்ட நிதியானது தீர்ந்து விட்டதால் நேற்றையதினம் (01.10.2023) அரசிடம் போதுமான நிதியில்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு
முன்னதாக, நவம்பர் மாதம் இறுதி வரையிலான காலக்கட்டத்துக்கு நிதி ஒதுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், ஆளும் ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் அவையில் நிறைவேற்றப்பட்டாலும், எதிர்க்கட்சியினர் கை ஓங்கியிருக்கும் பிரதிநிதிகள் அவையில் மசோதா நிறைவேறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் போருக்கு நிதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு செலவினங்களைக் குறைத்தால்தான் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்தி மசோதாவை தோல்வியடையச் செய்துள்ளனர்.
உக்ரைனுக்கான நிதி ரத்து
இதனால், அமெரிக்க அரசு நிதியில்லாமல், முடங்கும் அபாயம் ஏற்பட்டது. சனிக்கிழமை (30.09.2023) வரை நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசு முடங்க சில மணி நேரங்களே மீதம் இருந்தது.
இதற்கிடையே, சனிக்கிழமை (30.09.2023) நள்ளிரவில், உக்ரைன் போருக்கு நிதி உதவியை கைவிடுவது என்று தெரிவிக்கப்பட்டு, நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு குடியரசுக் கட்சியினர் அதிகம் உள்ள பிரதிநிதிகள் அவையிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசு முடங்கும் அபாயம் தற்காலிகமாக நீங்கியிருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
