கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதியை தர மறுத்த அமெரிக்கா! வெளியான காரணம்
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்து வருகின்ற நிலையில்,இந்த கோவாக்சின் தடுப்பூசியை ஒகுஜென் நிறுவனம் அமெரிக்காவில் தயாரித்து வருகின்றது.
இந்நிலையில்,இதன் தொடர்ச்சியாக ஒகுஜென் நிறுவனம், கோவக்சினுக்கு அவசர கால அனுமதி கோரி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தது.
இதன்படி,அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கோவாக்சினுக்கு அவசர கால அனுமதியை வழங்க மறுத்துள்ளது.
இருப்பினும் ஒகுஜென் நிறுவனம், கோவாக்சின் தடுப்பூசியை கொண்டு செய்யப்பட்ட ஆய்வக பரிசோதனையின் பகுதி தரவுகளை மட்டுமே கடந்த மார்ச் மாதம் சமர்பித்திருந்ததுடன்,கோவக்சினின் ஆய்வக பரிசோதனை தொடர்பாக கூடுதல் தரவுகளை தருமாறும், கோவக்சினுக்கு முழுமையான தடுப்பூசி உரிமத்திற்கு விண்ணப்பிக்குமாறும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒகுஜென் நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புதிய தடுப்பூசி விண்ணப்பங்களுக்கு இனி அவசரகால அனுமதி தரப் போவதில்லை என முடிவெடுத்திருந்த நிலையில்,முழுமையான அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்குமாறு கோவக்சினுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri