இந்தியாவில் குழந்தை மீது விழுந்த டிவி: பரிதாபமாக பிரிந்த உயிர்
இந்திய(India) மாநிலம் கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை மீது டிவி விழுந்ததில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு(24.06.2024) 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்,கொச்சின் துறைமுக நகருக்கு அருகில் உள்ள மூவாட்டுப்புழாவில் வசித்து வருபவர் அனாஸ் என்பவரின் அப்துல் சமத் என்ற ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
படுகாயமடைந்த குழந்தை
குறித்த குழந்தை மீது நேற்றிரவு(24) டிவியானது அதன் மேசையுடன் விழுந்துள்ளது.
இதனைதொடர்ந்து, படுகாயமடைந்த குழந்தை உடனடியாக அப்துல் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலும், டிவி வைக்கப்பட்டிருந்த மேசையை குழந்தை தொட்டதால் மேலே விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 15 மணி நேரம் முன்

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
