தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு பறந்த கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 37 பேரை இலங்கை அரசு விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விரைந்து விடுவிக்கவும் தமிழக முதல்வர் அமைச்சர் ஜெய்சங்கரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனது முந்தைய கடிதத்தில் நான் சுட்டிக் காட்டியது போல், கைதுகள் மற்றும் மிரட்டல் சம்பவங்கள் தடையின்றி தொடர்கின்றன என்றும், இதனால் வாழ்வாதாரம் இழக்கப்படுகிறது எனவும் அவர் தனது கடிதத்தில் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/RjQNNpwFaI
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 24, 2024
உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை
இந்நிலையில், மீண்டும் ஜூன் 22ஆம் திகதி ராமேஸ்வரம் துறைமுகத்தைச் சேர்ந்த 22 கடற்றொழிலாளர்கள் மற்றும், அவர்களது மூன்று இயந்திர படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |