அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் 30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட நபர்களிடையே குடல் புற்றுநோய் (Colorectal Cancer) பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கையில் சுமார் 3,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சேனக தலகல இது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அச்சுறுத்தலாக மாறியுள்ள குடல் புற்றுநோய்
இதன்படி இலங்கையில் ஆண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. பெண்களிடையே இது மூன்றாவது பொதுவான புற்றுநோயாக உருவெடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, குடல் புற்றுநோய் உலகளவில் ஒரு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
வழமையாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த நோய் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால், தற்போது இலங்கையில் இளம் வயதினரிடையே (30-50 வயது) இந்த நோய் பரவி வருவது ஒரு தீவிரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அறிகுறிகள்
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் விசேட நிபுணர் டாக்டர் ஹசரலி பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில்,

ஆரம்பக்கட்ட பரிசோதனை (Screening): நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது உயிரைக் காப்பாற்ற உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள் என குறிப்பிட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri