பன்னாட்டு அரசியலில் தமிழரின் பயணப்பாதை

srilanka tamil
By Independent Writer Jan 12, 2021 09:13 PM GMT
Report

ஒரு நூற்றாண்டு கால தொடர் தோல்விகள் முள்ளிவாய்க்கால் பேரவலம் பெருவலியும் தந்த சீரழிவிலிருந்து மீள முடியாமல் பயணப் பாதையும் தெரியாமல் ஈழத்தமிழினம் தவிக்கிறது என தொல்லியற்துறை மூன்றாமாண்டு மாணவன் திபாகரன் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் அவர் மேலும்,

தமிழரிடம் தமது சூழலுக்கும்இ நமது பிரச்சனைகளுக்கும்இ தேவைகளுக்கும் பொருத்தமான அரசறிவியல் வளர்ச்சி இன்னும் அடையவில்லை.

மாறாக அரசறிவியலில் வறட்சியும் அந்த வறட்சியில் இருந்து எழுந்த அரசறிவியல் வறுமையும் அரசியல் வறுமையிலிருந்து பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று போட்டியும் பொறாமையும் சுயநலமுமே தமிழ் தலைமைகளிடம் மேலோங்கியுள்ளது.

இன்று இருக்கின்ற தமிழர் அரசியல் சூழலில் எதிர்காலமென்பது எல்லா வகையிலும் தமிழ் மக்களின் ஐக்கியத்திலேயே தங்கியுள்ளது.

எதிர்வரும் காலத்தில் ஐக்கிய நாடுகள் நோக்கிய அரசியல் நகர்வில் போர்க்குற்றம், இனப்படுகொலை என்பவற்றை சர்வதேச அரங்கில் முன் நிறுத்துவதற்கு முதலாவதாக இந்த சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் செயல்பட வேண்டும். இது முதலாவது அடிப்படை நிபந்தனையாகும்.

மேலும் ஐக்கிய நாடுகள் மன்றம் என்பது அரசுகளுக்கான மன்றம். அந்த மன்றத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் எனில் அரசுகளுக்கு ஊடாகவே திறக்கப்பட வேண்டும். அவ்வாறு தான் திறக்கப்படவும் முடியும். இந்த அரசியலை தமிழ்த் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ளவேண்டும்.

2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் என்பது உண்மையில் அரசு அற்ற சமூகங்கள் தங்கள் குறைகளையும் வேதனைகளையும் அங்கு சென்று ஒப்பாரி வைத்து அழும் தாழ்வாரம் போன்றது.

அந்த தாழ்வாரத்தில் அழுவதன் மூலம் ஒப்பாரி வைப்பதன் மூலம் இந்த அரசு அற்ற சமூகங்கள் தங்களை உளவளப்படுதலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் அதாவது கவுன்சிலிங் மேற்கொள்ளப்படும் ஒரு சென்சார் என்றே இன்றைய கொள்ளப்பட வேண்டும் அதற்காகவேதான். இவ்வாணையம் சக்தி வாய்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் ஊடாக வல்லரசுகள் அவ்வப்போது சமகால அரசியல் நிகழ்போக்கில் தங்களுடைய நலன்களை அடைவதற்கான தந்திரோபாயங்களை வகுத்து செயல்பட்டு தங்கள் நலன்களை பூர்த்தி செய்து கொள்வர்.

எனவே தமிழ்த் தரப்பு மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு அதாவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை நோக்கியே நகர்த்துவதற்கு உரிய அரசியல் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதே பொருத்தமானது

அதற்கு வல்லரசுகளின் ஆதரவு இன்றி தமிழினப் படுகொலையை பொதுச்சபை நோக்கி கொண்டு செல்ல முடியாது. அதை விடுத்து எவ்வாறெனினும் கடும் பிரயத்தனத்தில் மத்தியில் கொண்டு சென்றாலும் அங்கு செல்வாக்குச் செலுத்த முடியாத சூழல் தோன்றும்.

எனவே ஐக்கிய நாடுகள் என்கின்ற அரசுகளின் மன்றத்தில் செல்வாக்கு செலுத்தவும் செல்லப்பிள்ளையாக இருப்பதற்கும் நாம் வல்லரசுகள் உடனோ அல்லது வல்லரசு சார் குட்டி வல்லரசுகளுடன் சமாசாரம் செய்து கொள்ள வேண்டியதும் நமது உறவை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

கடந்த 10 ஆண்டுகள் காலமாக மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் நோக்கிய அனைத்துச் செயற்பாடுகளும் அப்படியே பழைய நிலையிலேயே உள்ளன. அவை தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மையாகும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது பெரும் அழிவைத் தந்தது மாத்திரமல்ல அது ஒரு பிரசாதத்தையும் தந்து விட்டு தான் சென்றது. அதாவது இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலையை சர்வதேச அரசியலில் முதலீடாக்கி அதன் ஊடாக தமிழர்கள் தமது தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான வாய்ப்பை அது தந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

தமிழினப் படுகொலையை சர்வதேச வல்லரசுகள் தங்களின் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியல் பொருளியல் நலனுக்காக தம் கையில் எடுத்து அழுத்த தந்திரத்தை, பயன்படுத்தி இலங்கை அரசை பணிய வைக்கவும் வளைய வைக்கவும் முயற்சி செய்கின்றனவே தவிர அது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்மானத்தை நோக்கி கொண்டு செல்ல முயலவில்லை.

இந்த அரசுகள் பயன்படுத்தும் அழுத்த தந்திரம் என்பது சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சனையை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்குமேயன்றி அதனை கடந்து அது ஒரு அரசியல் தீர்மானத்தை.நோக்கிச் செல்ல மாட்டாது. இத்தகைய அழுத்த தந்திரோபாய நிலை தொடருமானால் பத்து வருடங்கள் என்ன நூறு வருடங்கள் சென்றாலும் இந்த நிலைதான் தொடரும்.

இத்தகைய நிலையானது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. இவ்வாறு காலத்தைக் கடத்தி இனப்படுகொலையாளிகள் மற்றும் இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இத்தோடு காலங்கள் நீண்டு செல்ல இனப்படுகொலையாளிகள் இயற்கை மரணம் அடைந்து விடுவார். இதன் மூலம் இலங்கை அரசு தொடர்ந்து தப்பிக் தப்பிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதோடு கால நீட்சி என்பது பிரச்சனைகளை மறக்க வைக்கவும் இல்லாதொழிப்பதற்கு மன ஒரு தந்திரமும் கூட. இத்தகைய போக்கு ஈழத்தமிழர் பிரச்சினையை இந்து சமுத்திரத்தின் அடி ஆழத்தில் புதைத்து விடக் கூடிய தன்மை கொண்டது.

எனவே தமிழர் தரப்பை வெற்றியின் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அரசுகளின் அவையாவன ஐக்கிய நாடுகளின் வீட்டோ அதிகாரமுள்ள அமெரிக்கா, ரஷ்யா, சீனா,பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் ஏதாவது ஒன்றையோ அல்லது நிழல் வீட்டோ அதிகாரம் உடையது என்று கருதப்படக்கூடிய உலகில் செல்வாக்கு மிகுந்த இந்தியாவையோ தமிழர்கள் தெரிவு செய்து அதனூடான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால வரலாற்றில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது எனச் சொல்லப்படும் கம்போடியா, பர்மா, ஆர்மேனியா என்ற வரிசையில் இவை அனைத்திற்கும் வல்லரசுகளின் அனுசரணையும் ஆதரவும் இருந்தது. வல்லரசுகளின் ஆதரவிலேயே அவர்கள் இனப்படுகொலை என்பதனை நிறுவி அதற்கான தீர்வினையும் சாத்தியப்படுத்தினர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். வல்லரசுகளில் அதிகாரமுள்ள நாடுகளின் செல்வாக்கு இன்றி அணுவும் அசையாது.

ஈழத்தமிழர்களின் முதலாவது தெளிவாக மேற்குலகம் சார்ந்து அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் ஆகிய நாடுகளை நாடுகளை அணுகமுடியும். அதற்கேற்ற வகையில் மேற்குலகில் புலம்பெயர்ந்து வாழும் ஒரு மில்லியன் தமிழர்களின் பலத்தை பயன்படுத்தி நாடுகளை அணுகுவதற்கான வேலைத்திட்டங்களை புலம்பெயர் தமிழர்களும் மேற்கொள்ள முடியும். எனினும் மேற்குலகத்தினால் அழுத்தத்தையே தொடர்ந்து பிரயோகிக்க முடியும்.

அதே நேரத்தில் இன்றைய சூழலில் ரஷ்யாவை அணுகுவதற்கான வாய்ப்புகள் தமிழர்களிடம் மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான வளங்களும் தற்போது நம்மிடையே இல்லை. அதேநேரத்தில் சீனாவை அணுகுவோம் எனசில இடதுசாரிக் குஞ்சுகள் கத்தி கொடி குடை ஆலவட்டம் பிடிக்கக் கூடும். ஆனால் சீனா இலங்கையுடன் நீண்ட காலமாகவே கைகோர்த்துக் கொண்டு விட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு எடுத்ததன் மூலம் அது தன்னை சிங்களப் பேரினவாதத்துடன் இணைத்துக் கொண்டு விட்டது. அது பௌத்த மதத்தின் பேராலும் தன்னை இறுக்கமாக இணைத்துக் கொண்டு விட்டது.

எனவே சீனா தமிழர் பக்கம் வருவதற்கான சாத்தியங்கள் மிக மிக அரிது. அதே நேரத்தில் அதே சீனா தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பின் கதவால் ரகசியமாக ஆதரவளிப்பதாக உறுதியளித்து முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்து துரோகமும் செய்து விட்ட வரலாறு வெளியுலகுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கிறது.

சிலவேளை சீனா தனக்கு தேவை ஏற்படுகின்ற போது தமிழர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாசாங்கு செய்யலாம். தன் தேவை முடிவடைந்ததும் தமிழர்களை பலி கொடுத்து எம்மை நட்டாற்றில் விட்டு விட்டு தன் வழியைப் பார்த்துக் கொள்ளும், 2009 மே மாதம் செய்ததைப் போல. எனவே எது எப்படி இருப்பினும் சீனா தமிழர் பக்கம் வருவதற்ககோ உதவிட ப வாய்ப்புகள் கிடையவே கிடையாது.

எனவே வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளை தவிர்த்து தமிழர் தரப்பு கையாளக் கூடிய வேறொரு ஒரு நாடு என்றால் அது இந்தியாவாக தான் இருக்கமுடியும். இன்று இந்தியாவிற்கு ஒரு வெகுஜன அரசியல் தேவைப்படுகிறது. புவிசார் அரசியலிலும்சரி இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல் நலனிலும் சரி இந்து சமுத்திரத்திற்கான உலகளாவிய அரசியல் நலனிலும் இந்தியாவிற்கான பங்கும் பாத்திரமும் மலையளவு.

அத்தோடு இலங்கைத் தீவு இந்தியாவின் பாதுகாப்போடு தொடர்புபட்டு இருக்கின்றது என்ற வகையிலும் இந்தியாவின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மைகளோடு தொடர் பெற்றிருக்கின்ற வகையிலும் இந்தியாவை தமிழர்கள் பக்கம் திருப்ப வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

கடந்த காலத்தில் ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா தவறு இளைத்தது என்பதும் உண்மை. ஈழத் தமிழர்கள் இந்தியாவை எதிர்த்தும் அடித்தும் அதன் உலகளாவிய மதிப்பை குறைக்கும் இந்தியாவின் தமிழர் சார்ந்த மென் போக்கை இறுக்கம் அடையச் செய்ததும் உண்மை. அதேநேரத்தில் இனியும் இந்தியாவை தமிழர்கள் அசைத்து தன்பக்கம் திருப்ப முடியும் என்பதும் உண்மை.

இந்தியா என்கின்ற போது தமிழகத்தின் மக்களும் அதன் உள்ளே தான் உள்ளடங்குகின்றனர். எனவே தமிழகத்தின் 8 கோடி தொப்புள்கொடி உறவுகளின் ஆதரவை கட்சி பேதங்களைக் கடந்து ஈழத்தமிழ் மக்கள் திரட்டுவதன் மூலமே இந்தியாவை தன் பக்கம் திருப்பி அதற்கான ஒரே வழி.

சுதந்திர இந்தியாவில் 100 வீதம் வெற்றிகரமாக நடந்த பொதுஜன போராட்டம் என்றால் அது தமிழகத்தில் 1983 ஆகஸ்ட் 16ஆம் திகதி ஜூலை படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முழு அளவிலான கதவடைப்பு போராட்டத்தையே வரலாறு பதிவு செய்திருக்கிறது.

அன்று தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே குடையின்கீழ் ஈழத்தமிழர்களுக்காக நின்றார்கள். அத்தகைய வரலாற்றுப் பின்னணியில் எதிர்காலத்திலும் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் கட்சி பேதங்களை கடந்து ஓரணியில் நிற்பர்.

கடந்த காலத்தில் தமிழக சட்டசபையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் நடந்தது என்ற தீர்மானத்தையும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டசபை மேற்கொண்டிருக்கிறது என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அந்த அளவிற்கு ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகள் தங்கள் உதவி கரங்களை நீட்ட முடியும். எதிர்காலத்திலும் நீட்டுவார்கள். எனவே ஈழத்தமிழர் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் ஒரே முகத்தோடு நேசக்கரம் நீட்டி அவர்கள் ஆதரவை பெறுவதன் ஊடாக மத்திய அரசை தமக்குச் சாதகமாக திருப்ப வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இந்தியா வீட்டோ அதிகாரம் இல்லாத நாடு என்றாலும் அது ஒரு நிழல் வீட்டோ அதிகாரமுள்ள நாடாகவே கருதப்படுகிறது. ஏனெனில் ஐ.நாவில் உள்ள 196 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் எப்போதும் இந்தியாவுக்கு சார்ந்ததாகவே இருக்கும் அதே நேரத்தில் சீனாவுக்கு ஆதரவாக 50 நாடுகளுக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்ட கூடிய சக்தியாகவும் இந்தியா உள்ளது அதே நேரத்தில் வீட்டோ அதிகாரமுள்ள சீனா தவிர்ந்த நான்கு நாடுகளின் ஆதரவும் இந்தியாவுக்கு உண்டு.

புவிசார் அரசியலில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அடங்கும் நாடு அத்தோடு இந்தியா இந்து சமுத்திரப் பிராந்திய பிராந்தியத்தின் பலம் பொருந்திய மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஆனால் சீனா இந்து சமுத்திரப் பிராந்திய நாடல்ல அது தனது பொருளாதாரத்தை பயன்படுத்தி அரசியல் புயல் ஊடாக இந்து சமுத்திரத்தில் நுழைந்திருக்கும் நாடு. இத்தகைய சீனாவின் நுழைவை உலகின் சக்தி படைத்த பெரும்பான்மை நாடுகள் விரும்பவில்லை.

அந்த வகையில் இந்தியாவை தமிழர் பக்கம் திருப்புவது தமிழருக்கு நன்மை பயக்கும் அதே நேரத்தில் இந்தியா எதிர்க்கின்ற அல்லது ஆதரவு அளிக்காத அனுசரணை அல்லாத எதனையும் தமிழர் தரப்பால் அடைய முடியாது என்ற நிலையே புவிசார் அரசியலிலும் சரி பன்னாட்டு அரசியலில் சரி காணப்படுகிறது

தமிழர் தரப்பில் இந்தியாவை தெரிவு செய்து சர்வதேச அரசியலில் முன்னோக்கி நகர்வது என்பது பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களும் தோன்றலாம. இந்த காலத்தில் இந்தியாவை விடுத்து தமிழர்களால் எதனையும் அடையக் கூடியதாக இருந்ததா என்றால் இல்லை என்றே பதில் வரும் கடந்த காலத்தில் பரஸ்பரம் இரு தரப்பிலும் தவறுகள் இருந்திருக்கலாம். தவறுகளை புரிந்துகொண்ட திருத்தியும் புதிய உறவை வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே இன்று இருக்கின்ற இந்துமா சமுத்திரத்தின் கொதிநிலையை தமிழர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் "அரசியல் என்பது காணப்படும் வாய்ப்புக்களை கையாளும் கலை" என்பர்.

அந்த வகையில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் தலைமைகள் இந்தியாவுடனான உறவை வளர்ப்பதற்கு அல்லது தமிழக தலைவருடன் உறவை வளர்க்கவோ இத்தகைய முயற்சிகளை எடுத்தார்கள் தமிழ் தலைவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து எத்தனை தலைவர்களைச் சந்தித்தார் எதுவுமே நடக்கவில்லை.

நாம் உறவுகளை வலுப்படுத்த செல்லாமல் எவ்வாறு அரசியல் வெற்றிகளை ஈட்ட முடியும். எனவே தமிழ்த் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தி இந்திய மத்திய அரசை தம்பக்கம் திருப்புவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்பது இந்தியாவின் பொருளாதார அறிவியல் கடல்சார் பாதுகாப்பு மூலோபாய நிலம்.

எனவே இந்தியப் பேரரசின் இயங்கு சக்தியின் இருதயப் பகுதி நிலமாகிய தமிழகத்தை தன் பக்கம் திருப்பும் அதன்மூலம் இந்திய அரசை தமிழர்களுக்கான ஆதரவு சக்தியாக நிலைநிறுத்தி முடியும் என்பதே உண்மையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US