திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் முன்னாள் கிழக்கு ஆளுநரை பாதுகாத்த குகதாசன்: எழுந்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சண்முகம் குகதாசன் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரை திருக்கோணேஸ்வர ஆலய நிருவாக தரப்புடனான கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாத்தவர் என தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிள்ளை சிறீபிரசாத் தெரிவித்துள்ளார்.
நிர்வாக விவகாரத்தில் முட்டி மோதிக்கொண்ட இரு தரப்புக்களும் தற்போது ஒன்றினைத்து பொது தேர்தலில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தமிழ் சமூகத்தின் இருப்பை பாதிக்கும் என விசனம் வெளியிட்டுள்ளார்.
கூட்டணியாக போட்டி
திருகோணமலையில் நேற்று (12) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தமிழர்களின் தொன்மையான திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பில் நீதிமன்றம் வரை கொண்டு சென்றவர்கள் தற்போது இரு தரப்பும் ஒன்றினைத்து வீட்டு சின்னத்தில் கூட்டணியாக போட்டியிடுகின்றனர்.
சண்முகம் குகதாசன்
தற்போதைய தலைவர் சட்டத்தரணியான ஒருவரே குறித்த ஆலயத்தின் தலைவராக இருக்கிறார். இவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
கடந்த காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சண்முகம் குகதாசன் கிழக்கு முன்னாள் ஆளுநரை நிருவாக தரப்புடனான கலந்துரையாடல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாத்தவர்.
ஆலயத்தை வைத்து இலங்கை தமிழ் அரசு கட்சி அரசியல் செய்கிறது. இதனை ஏற்கமுடியாது. நிருவாக சபையின் தொண்டர் குழுவும் இவர்களுக்கு அரசியல் நடவடிக்கையில் இறங்க முடியாது தமிழர்களின் இருப்பை அழித்ததை போன்று ஆலய விடயத்தில் செயற்படுவது தமிழ் அரசு கட்சியே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |