இஸ்ரேலின் செயற்பாடு தொடர்பில் இலங்கை கடும் கண்டனம்
லெபனானின் நாகுரா பகுதியில் ஐக்கிய நாடுகளின் அமைதிக்காக்கும் படையணியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதல் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வௌிியி்ட்டுள்ளது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லெபனானின் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்தனர். மேலும் ஏனைய நாடுகளின் இராணுவத்தினர் சுமார் 20 அளவில் காயமுற்றிருந்தனர்.
இலங்கையர்களின் பாதுகாப்பு
இவ்வாறு காயமடைந்த இலங்கை இராணுவத்தினரின் உடல்நிலை தொடர்பில் அங்குள்ள இலங்கை தூதரகம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் லெபனானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை தூதரகம் கூடுதல் அவதானத்துடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |