கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை மீட்ட அதிரடிப்படையினர்
பதுளை லுணுகல பொலிஸ் பிரிவின் உடகிருவ வனப்பகுதி மற்றும் உடுகிருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
லுணுகல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான சிறுமியை சந்தேக நபர்கள் கடத்திச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
18 மற்றும் 53 வயதான நபர்களே சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் லுணுகல மற்றும் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுணுகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக லுணுகல சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி சந்தேக நபர்கள் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து லுணுகல பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய பசறை மற்றும் லுணுகல விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து கூட்டாக தேடுதலை நடத்தி சிறுமியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 1 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
