திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது
வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்தில் திருப்பணி அபிவிருத்தி வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு கேடர்கள் ஐந்தை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவரும், இராமநாதபுரம் பகுதியில் ஒரு ,லட்சம் ரூபா பெறுமதியான பசு மாட்டினை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
அதே பகுதியில் தண்ணீர் இறைக்கும் நீர் பம்பிகை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும், வட்டக்கச்சி கல்மடு பகுதியில் நான்கு துவிச்சக்கரவண்டிகளை திருடிய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் அனைவரும் தர்மபுரம் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் தாம்
செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டதற்கிணங்க கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில்
முற்படுத்தபட்ட நிலையில், எதிர்வரும் 18 .08 2022 வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.