ஆப்கானிஸ்தானில் இன்று புதிய அரசாங்கத்தை அமைக்கும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர்.
தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.
பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,