துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரின் முகத்தை கடித்த மாணவி!
17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் க.பொ.த (சாதாரண தர) நடைமுறைப் பரீட்சை பயிற்சிக்காக பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நபர் ஒருவர் குறித்த மாணவியை துஷ்பிரயோகம் செய்யமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக சிங்கள இணைய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவி தனது கிராமத்திற்குச் செல்லும் வழித்தடத்தில் வந்த ஒருவர், சாலையைக் கடந்து, மாணவியைத் தாக்கி, அருகிலுள்ள வெறிச்சோடிய ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர், தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது, குறித்த நபரின் முகத்தை கடித்து, கல்லால் முகத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பில் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதால், கடந்த காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
