கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வெலிக்கடை சிறை கைதிகளின் போராட்டம்
சிறைக்கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக வெலிக்கடை சிறையில் ஏற்பட்ட பதற்றநிலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சிறையதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகள் சிறைக்கூரையின் மீதேறி கலக நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் ,ஏனைய கைதிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தினர்.
தமது தண்டனைக் காலத்தை குறைக்குமாறும் அல்லது பொதுமன்னிப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தனர் கோரிக்கைகள் தொடர்பில் சிறையதிகாரிகள் கலந்துரையாடியபோதும் கைதிகள் கூரையில் இருந்து இறங்கவில்லை.
இந்தநிலையில் சிறையதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்...
வெலிகடை சிறைச்சாலையில் பதற்ற நிலை

ஒரே ஒரு மாணவன் மற்றும் ஒரே ஒரு ஆசிரியருக்காக செயல்படும் அரசு பள்ளி.., எந்த மாநிலத்தில்? News Lankasri
