வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஐந்து வருடத்தை எட்டியது (VIDEO)
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றைய தினம் (24) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட பந்தலிற்கு முன்பாக குறித்த போராட்டமானது இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல்போன உறவுகளின் படங்களினை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் மற்றும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு காணாமல் போனவர்களின் உறவுகளினால் அனுப்பிய கடிதம் தொடர்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில்,
"ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தவிர்த்தல்" என்ற நமது தொடரின் 5வது ஆண்டு நினைவு தினம் இன்று இந்த உலகத்தில், 5 ஆண்டுகளாக, 1833 நாட்களாக இந்தப் போராட்டத்தை தெரு வீதியில் கொட்டகை அமைத்து நாம் மட்டும்தான் தொடர்கிறோம்.
ஐசிசி மற்றும் பொதுவாக்கெடுப்பு ஆகிய இரண்டு விஷயங்களில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உலகுக்கு காட்ட, எங்களைப் போல் இரவு பகலாக தெரு வீதியில் கொட்டகை அமைத்து போராடுவதற்கு, கிளிநொச்சி மற்றும் பிற இடங்களில் உள்ள மற்ற தாய்மார்களையும் ஊக்கிவிக்கிறோம்.
இந்த முக்கியமான நாளில், எங்களுக்கு உதவிய தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். எமது தமிழ் மக்களின் உதவியின்றி நாம் இந்தப் போராட்டத்தை தொடர்ந்திருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.









தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
