அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் இலங்கை அரசு!
நாடாளுமன்ற சபை அமர்வுகள் கூடுவதற்கு முன்பதாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனபடி, விவசாயத்துறை அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, வலுசக்தி அமைச்சு, மின்சக்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட சில முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை முன்னெடுக்கலாம் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், புதியவர்களுக்கும், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் குறிப்பாக, அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்களும் தொடர்ந்து அரசின் சில செயற்பாடுகளை நேரடியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
