பிரித்தானியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் பரவினால் நிலைமை மோசமாகும்
பிரித்தானியாவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய திரிபு, இலங்கைக்குள் பரவினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இதனால், கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இலங்கைக்குள் வருவதை தடுக்க உச்சளவான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.
கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபானது 70 வீதம் வேகமாக பரவக் கூடியது. சுற்றுலாப் பயணிகள் ஊடாக இந்த வைரஸ் நாட்டுக்குள் பரவினால் நிலைமை மோசமாகும்.
இதன் காரணமாக அந்த வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.