பெண் ஊடகவியலாளரை மீண்டும் பணியில் இணைக்கவேண்டும்- பெண் ஊடகவியலாளர் அமைப்பு கோரிக்கை!
இலங்கையின் தெற்காசிய பெண்கள் ஊடகங்கள் அமைப்பு, அரச தொலைக்காட்சி வலையமைப்பான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டை கண்டித்துள்ளது.
மூத்த நிகழ்ச்சி தொகுப்பாளரான பரமி நிலேப்தா ரணசிங்கவை பணியில் இருந்து தடை செய்யும் முடிவை உடனடியாக திரும்பப் பெறுமாறு அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
2022, மார்ச் 6ஆம் திகதி, பரமி நிலேப்தா ரணசிங்க தனது வழக்கமான நிகழ்ச்சியான 'ரிவிதின அருணெல்ல”வுடன் தொடர்புடைய இரண்டு தயாரிப்பாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்றார்.
இதன்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் பரமி நிலேப்தாவை, ரூபவாஹினி வளாகத்துக்குள் வருவதை தடை செய்யுமாறும், நிகழ்ச்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 5ஆம் திகதியன்று தனது பேஸ்புக் பதிவில், அரசாங்கத்தை விமர்சித்தமை காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்பாளர் பரமி நிலேப்தா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் ரணசிங்கவின் பதவி நீக்கம் அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவாக அமைந்துள்ளது. அத்துடன் அவரின் அடிப்படை சுதந்திரங்களை கடுமையாக மீறுவதாகவும் இலங்கையின் தெற்காசிய பெண்கள் ஊடகங்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேசிய தொலைக்காட்சி நிலையம், பொது நிதியில் பராமரிக்கப்படும் ஒரு நிறுவனம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது வெட்கமற்ற அரசியல் தலையீடு என்றும் பாரபட்சமான மற்றும் சுதந்திரமான கருத்துரை வழங்குபவரின் உரிமையை மீறும் செயலாகும் என்றும் ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையி;ல், அரச ஊடகங்களை அரசாங்கங்கள், பிரசார இயந்திரங்களாகப் பயன்படுத்துவதை இப்போதாவது முடிவுக்கு வர வேண்டும்,
அத்துடன் இந்த நிறுவனங்கள் அரசியல்வாதிகளுக்கு அல்ல, பொதுமக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்கள் என்பது உறுதி;ப்படுத்தப்படவேண்டும் என்றும் இலங்கையின் தெற்காசிய பெண்கள் ஊடக வலையமைப்பின் இணை அழைப்பாளர்களான ஹனா இப்ராஹிம் மற்றும் தில்ருக்;ஸி ஹந்துன்நெத்தி ஆகியோர் கோரியுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
