இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு: பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், கால்நடைகள், வாழ்வாதாரங்கள் தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வான் கதவுகள்
இரணைமடு குளத்திற்கு மேல் பகுதியில் 100 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளத்தை நோக்கி அதிக நீர் வருகை தருவதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர் வருகையை அடிப்படையாகக் கொண்டு வான்கதவுகள் மற்றும் திறக்கப்படும் அளவு தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
படிப்படியாக வான்கதவுகள் திறக்கப்படும் எனவும், அறிவுறுத்தலிற்கு அமைவாக மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும், குளங்கள் வான்பாய்வதாலும் மக்கள் இடர்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பத்தில், கிராம சேவையாளர் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவத்தினரின் உதவிகளை நாடுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு
வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை இரவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பாவற்குளம் நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் 4 கதவுகளும் 2 அடி விகிதம் திறக்கப்பட்டுள்ளது.
எனவே நெளுக்குளம் - நேரியகுளம் வீதிப் போக்குவரத்து நேற்று(14.12) இரவு 8 மணி தொடக்கம் காலை 5 மணி வரை முற்றாக தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, பாவற்குளத்தின் 4 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் நேரியகுளம் ஊடான நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 16 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
