இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் ஒருவர் சுட்டுக்கொலை! விசாரணை தீவிரம்
புதிய இணைப்பு
இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மட்டக்களப்பு - சின்ன ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டின் முன்னால் சற்றுமுன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் மெய்பாதுகாவலர் ஒருவர் பொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேநேரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைத் தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 18 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri