அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள் ஒன்றே! தொடரும் தடுப்பூசி சர்ச்சை
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய எண்ணும் Surfing விளையாட்டு வீரர் கெல்லி ஸ்லேடர் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை எச்சரிக்கும் விதமாக அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கோல்பெக் கருத்து வெளியிட்டுள்ளார்.
அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.இல்லையெனில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் போன்று வெளியேற்றப்படுவீர்கள் என பொருள்படும் படி அமைச்சர் கோல்பெக் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான விதிகள் அனைவருக்கும் ஒன்றே. நீங்கள் Surfer ஆக இருந்தாலும் சரி, டென்னிஸ் வீரராக இருந்தாலும் சரி, சுற்றுலாவாசி அல்லது எவராக இருந்தாலும் சரி அது பற்றி கவலை இல்லை,” என கோல்பெக் தெரிவித்திருக்கிறார்.
டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விவகாரத்தில், Surfing விளையாட்டு வீரர் கெல்லி
ஸ்லேடர் அவுஸ்திரேலியா அரசை விமர்சிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam