வாகனங்கள் வைத்திருப்போருக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
பண்டிகை கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் நகரங்களுக்கு வரும்போது சாரதிகள் தங்களது வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நாட்களில் வாகனங்களை திருடும் கும்பல் புறநகர்ப் பகுதிகளில் சுற்றித்திரிவதனால் நகரங்களில் வாகனங்களை நிறுத்தினால் பூட்டி விட்டு செல்லுமாறு சாரதிகளிடம் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா கோரிக்கை விடுத்துள்ளார்.
கடைகளின் பாதுகாப்பு
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தனியார் வாகனங்களை நிறுத்துமாறும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டுக் காலத்தில் கடைகளின் பாதுகாப்பு தொடர்பில் வர்த்தகர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
