கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப காலம்
நீடிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
விண்ணப்ப காலம்
இதற்கான விண்ணப்ப காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய முடியும்.

இவ்வாறு விண்ணப்பங்களில் திருத்தங்களை செய்ய வேண்டுமாயின் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை மாத்திரம் அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam