மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் பெப்ரவரி 15ம் திகதி முதல் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் அனுமதியுடன் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“மேல் மாகாணத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகளை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை பெப்ரவரி 15ம் திகதி முதல் மீள திறப்பதற்கு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகளை மீள திறக்க குழு பரிந்துரைத்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் மொத்தம் 446 பாடசாலைகளில் 442 பாடசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பெப்ரவரி 15 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டுமானால், சுகாதார அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது, அதன் நிலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam