இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் அதீத வெப்பத்திற்கான காரணம்
சமகாலத்தில் இலங்கையின் பல மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுகிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் பல பிரதேசங்களில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கின்றது.
சில பகுதிகளில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடும் வெப்பம்
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏன் இவ்வளவு அதிக வெப்பம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மற்றும் மே மாதத்தின் முதல் காலப்பகுதிகள் எப்போதும் அதிகமாகவே காணப்படும். இந்த காலப்பகுதியில் காற்று வீசும் படலம் நாட்டை சுற்றி காணப்படாது.
மிகவும் சிறிய அளவே காணப்படும். இதனால் அதிகளவிலான வெப்பத்தை மக்கள் உணர நேரிடும். நீராவியாகும் தன்மை அதிகமாக காணப்படும்.
எனினும் வியர்வை நீராவியாகதமையால் உடலில் உணரப்படும் வெப்பத்தில் அளவு அதிகமாக காணப்படும். இதற்கு முன்னரும் இவ்வாறு காணப்பட்டது. எனினும் கடந்த இரண்டு வருடங்கள் இந்த நிலை ஏற்படவில்லை.
அதற்கு பசுபிக் தீவுகளில் லானினா என்ற தன்மை காணப்பட்டது. அந்த தன்மை பெரிய அளவில் வெப்பநிலையை அதிகரிக்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.
எனினும் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டமையே இந்த அதிக வெப்பத்திற்கு காரணமாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமணி ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.