பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது! - பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கூறப்படும் பல்வேறு பொய்யான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசாரணைகள் வேகமாக முன்னேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட குழு ஒன்று, இந்த தாக்குதல், ஜனாதிபதி ஆட்சிக்கு வர மேற்கொள்ளப்பட்ட சதி என்று ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முயல்கிறது.
அந்தக்குழு, ஜனாதிபதியை இந்த விடயத்தில் தொடர்புபடுத்த முயற்சிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கமல் குணரத்ன குறிப்பிட்டார்.
இலங்கையின் காவல்துறை, அதிக அளவில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.மேலும் விசாரணைகளைத் தொடர்கின்றன என்று, தாம் பொறுப்புடன் கூற முடியும்.
அத்துடன் வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். எனவே, இந்த தவறான கருத்துக்களை, நம்ப வேண்டாம் என்று, பாதுகாப்பு செயலாளர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதன்ன மற்றும் காவல்துறை மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டனர்.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri